குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக முதல் பெண் அதிகாரி நியமனம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமாஷா முத்துமாலா குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் பொலிஸ் அதிகாரி இவராவார்.
இந்த நியமனத்திற்கான அனுமதியைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
இமாஷா முத்துமாலா கடந்த 2007 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டதுடன், அவருக்கு 14 ஆண்டுகள் பொலிஸ் சேவையில் அனுபவமுள்ளது.
உருகுணை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான அவர், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றுள்ளார்.
நுகேகொடை பொலிஸ் பிரிவில் குற்றவியல் விசாரணைப் பிரிவிலும் பொலிஸ் நற்சான்று அறிக்கை வழங்கும் பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam