கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட அசுவெசும பயனாளிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்வு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் அசுவெசும திட்ட பயனாளிகளில் அடையாள அட்டை இன்மையால் தமக்கான கொடுப்பனவுகளை பெற முடியாதோருக்கு அதனை பெற்றுக்கொடுப்பதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணிகள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மலையாள புரம் கிராம சேவகர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த வேலைத்திட்டமானது நேற்று (30.05.2024) கிளிநாச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் (Douglas Devananda) விசேட ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த பிரதேசத்தில் தேசிய அடையாள அட்டைகள் இன்றியும் பிறப்பு சான்றிதழ்கள் இன்றியும் காணப்பட்ட பலர் அதனை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |