முதன்முறையாக மடிக்கும் திறன்கொண்ட கைபேசியை அறிமுகப்படுத்தியது Apple
தனது வரலாற்றில் Apple நிறுவனம் முதன்முறையாக iPhone Duo எனும் புதிய மடிக்கும் கைபேசியை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் குப்பெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜோப்ஸ் அரங்கில் நடைபெற்ற Apple event நிகழ்வில் புதிய பிரதம நிறைவேற்று ஜோன் டெர்னஸ் தலைமையில் இந்த கைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு
இந்த புதிய மடிக்கும் கைபேசியின் வெளிப்புறத் திரை 5.4 அங்குலமாகவும், விரித்தவுடன் ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரியதான 7.6 அங்குலத் திரையைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
This iPhone duo animation pic.twitter.com/y7NftWpyXS
— Marques Brownlee (@MKBHD) September 9, 2026
மேலும், இதில் iPad சாதனத்தில் பயன்படுத்தப்படும் Apple Pencil ஸ்டைலஸைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டொலர்களில் தொடங்குகிறது. இதன் முன்பதிவுகள் எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25