களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
தெஹிவளை, களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில பகுதியில் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நண்பரின் வீட்டின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 11.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
சந்தேகநபர்கள் கைக்குண்டை வீட்டின் பிரதான வாயிலுக்குள் வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் முன்பக்க இரண்டு ஜன்னல்களுக்கும் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

தாக்குதலுக்கு இலக்கான வீட்டில் வசிக்கும் தரிது ரவிஷான் என்பவர், 'திசாநாயக்க முதியான்சேலாகே அவிஷ்க ஏஷான்' எனும் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் நண்பர் எனவும், அந்த போதைப்பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற போது 56 வயதான பெண் ஒருவர் மட்டுமே வீட்டில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் கொஹுவளை பொலிஸ் நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25