தமிழ் மொழி உரிமை பாதுகாப்பு! சகலருக்கும் சார்பான புதிய அரசமைப்பு: அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம்
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும்போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதைக் கட்டாயமாக்குவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். '
வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு வழங்கிய பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளா. அவர் மேலும் உரையாற்றுகையில்,
புதிய அரசமைப்பு
"நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக மாற்று முறைமையைச் செயற்படுத்துவோம். அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் நடைமுறைபடுத்துவோம்.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக 2015 -2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகளை முடிவுறுத்தி, அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசமைப்பை உருவாக்குவோம். தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம்.
அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி
அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும்போது அவருக்குத் தமிழ் மொழியில் பதிலளிப்பதைக் கட்டாயமாக்குவோம். அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமை மாற்றம் பெற வேண்டும்.
தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தைக் கட்டம் கட்டடமாகச் செயற்படுத்துவோம். பொருளாதார முன்னேற்றத்தின் பிரதி பலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது.
பாடசாலை கல்விக் கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தையும் குறைப்போம்." என்றும் தெரிவித்துள்ளார்.



Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
