சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் ரணிலிடம் திடீரென படையெடுக்க முக்கிய காரணம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்த நகர்வுகளை இலங்கையின் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ள நிலையில் கட்சித்தாவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றிப்பெறக்கூடிய சாத்தியம் அதிகளவில் உள்ளமையினால் சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் பலர் திடீரென ரணிலின் பக்கம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்னரே வெளிநாட்டு உறவுகளில் அநுரகுமார கவனம் செலுத்தியதோடு அதற்கான அடித்தளங்களை பலமாக பதித்துள்ளார். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சர்வதேச உறவுகளை தனது அரசியல் வரலாற்றின் மூலம் நிலைநிறுத்தியுள்ளார்.
இருப்பினும், உள்நாட்டு அரசியலிலும் கட்சித்தாவல்களின் மூலம் பெரும் சிக்கலை சந்தித்துள்ள சஜித் பிரேமதாச வெளிநாட்டு ரீதியிலான உறவுகளை மேற்கொள்வதில் பின்வாங்கி வருகிறார். இதன் காரணமாக சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் பலர் ரணிலின் பக்கம் படையெடுத்துள்ளனர்.
தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,