அநுரகுமார தலைமையிலான குழுவினர் குஜராத் விஜயம்
அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாள் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் இடமான குஜராத்திற்கு சென்றுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த குழுவினர் நேற்று (07.02.2024) இந்த சந்திப்புக்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த குழு குஜராத் முதல்வர் புபேந்திர படேலை சந்தித்து மாநிலத்தில் சில சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தை
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசியலே பின்னர் இந்தியாவின் உயர் பதவிக்கு அவரை உயர்த்தியது.
இந்தநிலையில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு இந்தியாவின் முன்னணி சிந்தனைக் குழுவான ‘ஒப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்’ (Observer Research Foundation) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அத்துடன் குழுவினர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை பார்வையிட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தப் பயணத்தின் போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் வினய் மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இதேவேளை குறித்த குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் இந்திய மாநிலமான கேரளாவுக்குச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
