ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு வெளியானது
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எவ்வித இணக்கப்பாடுகளையும் இதுவரையில் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதுவரையில் ஜனாதிபதி அதற்கான நேரத்தை ஒதுக்கித்தரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளக் கூடிய ஒருவருக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி ஆதரவினை வழங்கும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
