61 வயதில் 20 ஆண்டுகள் சிறை! அநுரவின் மறைமுக எச்சரிக்கை
நமது நாட்டில் ஒரு அரசியல்வாதி 61 வயதில் 20 ஆண்டுகள் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால் செல்வத்தால் என்ன பயன்? என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) நடைபெற்ற விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
20 ஆண்டுகள் சிறை
“முதலில் கூறியதை போல நாட்டில், அரசியலில் தற்போது ஒரு கறுப்புப் பொறிமுறை இயங்கி வருகிறது. அதை தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
ஒருவர் 61 வயதில் 20 ஆண்டுகள் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால் செல்வத்தால் என்ன பயன்?"
அவர் விடுவிக்கப்படும்போது அவருக்கு 81 வயது இருக்கும். அதன் பயன் என்ன?
நாட்டு மக்களின் வரிப் பணத்தை திருடுவது நியாயமானதா? மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கறுப்புப் பொறிமுறை நம் முன் உள்ளது.
மீண்டும் கூறுகின்றேன். இந்தக் கறுப்புப் பொறிமுறை உடைக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கக்கூடிய சூழலை உருவாக்கப்படும் என நான் கூறுகின்றேன்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.




