குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!
குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் களுத்துறை, ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெபெல்லகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டுத் தாக்குதல்
ஹொரணை , கெபெல்லகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் தனது அயல் வீட்டுக்குச் சென்று அங்கு வசிக்கும் நபருடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான அயல் வீட்டில் வசிக்கும் நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam