அதிகரித்துள்ள டொலர் கையிருப்பு! வெற்றிகண்டுள்ள அநுர அரசாங்கம்..
இலங்கையின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் ரூபாய் மற்றும் டொலர் கையிருப்பை வலுப்படுத்துவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாட்டின் டொலர் கையிருப்பு தற்போது 6 பில்லியனைத் தாண்டியுள்ளது. ரூபாய் கையிருப்பு ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளது.

வரி செலுத்தாத ஒரு சில குழுக்களிடமிருந்து வரிப் பணத்தை வசூலிப்பதன் மூலம், இந்த நாட்டில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரயங்களைக் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை 6 பில்லியன் டொலர்களாக உயர்த்த முடிந்துள்ளது.
பணத்தை அச்சிடுவதன் மூலமாகவன்றி, மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்தைத் தடுப்பதன் மூலம் அந்நியச் செலாவணி மற்றும் ரூபாய் கையிருப்பு அதிகரிக்கப்பட்டது என்றும் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam