யாழ். தமிழரின் சமையல் திறமை.. சர்வதேசங்களில் கிடைத்துள்ள மவுசு
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தோசை வியாபாரம் செய்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர், சர்வதேச ரீதியில் பிரபலமாகியுள்ளார்.
யாழை பிறப்பிடமாக கொண்ட கந்தசாமி திருக்குமார் என்ற நபர், தோசை மனிதன் என அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாட்டு மக்களிடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
தோசை மேன்
வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் தனது தள்ளுவண்டி கடை மூலம் தோசை விற்பனை செய்து வருகின்றார்.
திருக்குமார் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு கனவுகளுடன் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.
நியூயோர்க் நகருக்கு சென்றிருந்த காலத்தில் பல்வேறு பணிகளை செய்த பின்னர் தான், தனது தாய் மற்றும் பாட்டியிடம் கற்றுக்கொண்ட சீஸ் மசாலா தோசையை தனது அடையாளமாக மாற்றினார்.
இந்த தோசைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மட்டுமில்லாமல் கனடா, ஜப்பானில் உள்ளவர்கள் கூட தேடி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
