புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று(9) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் ஒன்லைன் ஊடாக விடைத்தாள் மதீப்பீடு தொடர்பான மேன்முறையீட்டை முன்வைக்க முடியும்.
மேன்முறையீடு
இதனை இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.