ரணில் நாடாளுமன்றம் வருவார் - ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கட்சி உறுப்பினர்களிடம் இருந்து ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்குள் செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அழைப்புகள் வந்துள்ளன.
ரணில் விக்ரமசிங்க
ஆனால், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை. ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்துக்குள் நுழையுமாறு மற்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இதில் அடங்குகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வந்தால் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
