மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி!
முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மீதான சமீபத்திய நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முன்னாள் கணக்காளரான அன்டன் பெரேரா, பகிரங்கப்பத்திய கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் பின்வரும் கருத்துக்களை கூறியுள்ளார்.
“மகிந்தானந்த மீதான விசாரணையைத் தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளேன் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.
ஓரங்கட்டப்பட்ட உத்தரவு
முன்னதாக அரசியல் ரீதியாக உந்தப்பட்ட உத்தரவுகளுக்கு இணங்க மறுத்ததால் தான் ஓரங்கட்டப்படுவதாக அச்சுறுத்தப்பட்டேன்.
தாம் விரும்பும் வழியில் நான் வேலை செய்யவில்லை என்றால், வெளியேற வேண்டும் என மகிந்தானந்த தரப்பினர் எச்சரித்தனர்.
பின்னர் அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி என்னை இடமாற்றம் செய்தனர்.
சர்ச்சைக்குரிய 15,000 கேரம் பலகைகள் பாடசாலைகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அல்ல. மாறாக தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பிரசார அலுவலகங்களை ஆதரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
இது தேர்தலை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டது. அதிகாரிகளின் உதவியின்றி அரசியல்வாதிகள் திருட முடியாது. அந்தக் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.
பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு குற்றவாளி என சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பு தீர்ப்பளித்தது. இது ஒரு மூத்த அரசியல் பிரமுகருக்கு அளிக்கப்பட்ட அரிய தண்டனையாகும்.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
