கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் அவசர தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் எடுத்து கூறியதற்கு அமைய இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்கு, ஆளுநரால் விடுத்த கோரிக்கைக்கு அமைய சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
இந்த நிதியின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான 500 KW வலுவுடைய மின்பிறப்பாக்கி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
அத்துடன் வைத்தியசாலை
ஊழியர்களுக்கான விடுதி புனரமைப்பு மற்றும் உள்ளக நடைபாதை புனரமைப்பு ஆகிய
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |