ராஜிதவிற்கு பிணை
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கிரிந்த மீன்வள துறைமுகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மணல் சுரங்க திட்ட ஊழல் வழக்கின் அடிப்படையில் ராஜித கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு பயணத் தடை
இந்த திட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுத்தப்பட்தாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் ராஜித பிணையில் செல்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜித சேனாரட்னவிற்கு 50000 ரூபா ரொக்கம் மற்றும் தலா மூன்று 20 லட்சம் ரூபா சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜித சேனாரட்னவிற்கு வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam