சற்று முன்னர் சிறப்பு விமானம் மூலம் நாட்டிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நோக்கில், இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர் இந்தியா நோக்கி பயணித்துள்ளார். இந்த தகவலை விமான நிலைய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயம்
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று (17) பிற்பகல் 2.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இந்த AI Impact Summit மாநாட்டில் உலகின் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam