நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் தாம் உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து வெளியிட்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக் கணிப்பு ஒன்றில் அரசு உயர்ந்த சதவீத ஆதரவைப் பெற்றதாகக் கூறி மிகை மகிழ்ச்சியில் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

அரசு உண்மையில் மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என்று நம்பினால், மாகாண சபைத் தேர்தலை நடத்தட்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.
குழுக்கள் அமைத்து, தெரிவுக் குழுக்கள் அமைத்து பல்வேறு உத்திகளை பயன்படுத்தி ஏன் மாகாண சபைத் தேர்தலை தள்ளிப் போடுகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது ஊழலைக் குறைக்கும் ஒரு நடைமுறையாகும் எனவும், பதவிக்காலம் முடிந்த பிறகு சமூகப் பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியம் எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam