அநுரவின் யாழ். விஜயம் தமிழருக்கு கூறும் செய்தி: கஜேந்திரகுமார் எம்.பி விளக்கம்
இலங்கை தீவில் தமிழருக்கு நீதி இல்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ். விஜயம் உறுதிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
செம்மணிப் பகுதியில் நேற்று(02.09.2025) இடம்பெற்ற வன்மம் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுர, செம்மணியை பார்வையிடாமல் சென்றது பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியின் வடிவமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
போர்க் குற்றங்கள்
70 வருடங்களாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் எதை செய்தார்களோ அவற்றையே ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய ஆட்சியிலும் பின்பற்றி வருகிறது.

இப்படிப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எம்மில் சிலர் செம்மணி விவகாரத்தில் நீதி நிலைநாட்ட உதவ வேண்டுமென கடிதம் எழுதுவது முட்டாள்தனமான செயற்பாடு என தற்போது விளங்கியிருக்கும்.

ஆகவே, தமிழர் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதே தீர்வுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri