தென்னிலங்கையை கதிகலங்க வைத்துள்ள கெஹெல்பத்தர பத்மே! நடுக்கத்தில் பல பொலிஸார்
இலங்கையில் பாதாள உலகக் குழுவின் தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பலர் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மே மற்றும் ஏனையவர்களிடம் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்களை கண்டுபிடித்து வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு இடையூறு
கெஹெல்பத்தர பத்மேயிடமிருந்து பணம் பெற்றவர்களில் பல உயர் பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது பதவி வகித்த அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் குழுவின் பெயர்களும் அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அரச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகளுக்கு இடையூறாக ஏற்படலாம் என்ற காரணத்தினால் பல தகவல்கள் ரகசியமாக பேணப்பட்டு வருவதாக பொலிஸாரின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.



