அதிகாரங்களை கைப்பற்ற அநுரவின் திட்டம் : இரகசிய கலந்துரையாடலில் அரசியல்வாதிகள்
உள்ளூராட்சி சபை தேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்கள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சி அமைப்புகளில் உள்ள முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன், எதிர்க்கட்சிகள் அதிக பெரும்பான்மையுடன் இருக்கும் சபைகளின் அதிகாரத்தை நிலைநாட்ட திட்டங்கள் வகுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சிகளுடன் கலந்ரையாடல் மேற்கொள்ளாமல் அரசாங்கத்தின் பிராந்தியத் தலைவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உறுப்பினர்களின் ஆதரவு
இது அந்த உறுப்பினர்களின் ஆதரவை சுயாதீனமாக பெறுவதற்கான ஒரு முயற்சியாகும்.
மேலும், சுயாதீனக் குழுக்களுக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தவும், பெலவத்தை தலைமை அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது மௌனக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் திரைக்கு பின்னால் இரகசிய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.