கூட்டிணையும் முன்னாள் ஜனாதிபதிகளின் வாரிசுகள்..
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனான தஹாம் சிறிசேனவை தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு தஹாம் சிறிசேனவை, நாமல் ராஜபக்ச அழைத்துள்ளார்.
எதிர்கால அரசியல் பயணம்
முந்தைய தேர்தல்களிலும், தஹாம் சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டார்.
வலுவான அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்து தஹாம் சிறிசேன இன்னும் எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை, மேலும் எதிர்காலத்தில் அவர் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் பத்தரமுல்லையில் போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்ற போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் நாமல் ராஜபக்ச மற்றும் தஹாம் சிறிசேன ஆகியோர் இணைந்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
