போதைப்பொருட்களுடன் கைதான பிரித்தானிய யுவதி வழங்கிய வாக்குமூலம்
இலங்கையில் கடந்த வாரம் பெருமளவு போதைப்பொருள் பொதியுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய யுவதி,டான் என்பவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த டான் என்பவரே, தமது பொதிகளில் போதைப்பொருட்களை பொதியிட்டிருக்கவேண்டும் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
முதல் இரவு தாம் தமது உடமைகளை பொதியிட்டு, நித்திரைக்கு சென்ற பின்னர், அடுத்த நாள் காலையில், பொதிகளை பரிசோதிக்கவில்லை என்றும் அவர் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிரபராதி
சுமார் 46 கிலோ கிராம் நிறை கொண்ட குஸ் ரக போதைப்பொருளை எடுத்து வந்ததாக தெரிவித்தே பிரித்தானிய யுவதியான சார்லோட் மே லீ அண்மையில் கைது செய்யப்பட்டார்.
எனினும், தான் நிரபராதி என்று வலியுறுத்தும் அவர், டான் என்று அழைக்கப்படுபவர், இலங்கையில் விடுமுறைக்காக தன்னுடன் இணைந்துக்கொள்வதாக உறுதியளித்ததாகவும், குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு லண்டனை சேர்ந்த லீ, அவரது தொலைபேசி எண் அல்லது குடும்ப விபரங்களை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அவர் இலங்கைக்கு பயணித்தாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், இதற்கு முன்னர் இலங்கைக்கு தாம் செல்லவில்லை என்று லீ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
