இங்கிலாந்தின் அழகிப்போட்டி 2025இல் இருந்து விலகிய யுவதி
2024 இல் இங்கிலாந்தின் அழகியாக தெரிவு செய்யப்பட்ட, மில்லா ஃபென்னி 2025 அழகிப்போட்டியில் இருந்து இடையிலேயே விலகியுள்ளார்.
போட்டியாளர்கள், பணக்கார ஆண் அனுசரணையாளர்களுக்கு "பொழுதுபோக்கு" அம்சங்களாக நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர் இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
23 வயதான ஃபென்னி, 2025 மே 16 அன்று சர்வதேச போட்டியில் இருந்து தானாக முன்வந்து வெளியேறிய முதல் இங்கிலாந்து அழகிப்போட்டியாளர் என்று கருதப்படுகிறார்.
குற்றச்சாட்டு
இது, தற்போது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், தாம் போட்டியில் இருந்து திடீரென வெளியேறியதற்கு தனிப்பட்ட காரணங்களை போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும், தாம், தவறாக நடத்தப்பட்டதாகவும், இழிவான, பொழுதுப்போக்காக நடத்தப்பட்டதாகவும் போட்டியாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கவர்ச்சியாகவும் நேசமானவராகவும் இருக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் எல்லா நேரங்களிலும் அழகு சாதனங்களை அணிய வேண்டும், உணவின் போது கூட முறையான உடையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விலகிய யுவதி
இறுதியாக, நன்கொடையாளர்களுக்கு 'நன்றி' தெரிவிக்கும் விதமாக நடுத்தர வயது ஆண்களை மகிழ்விக்க கூறியபோதே தாம் இந்தப் போட்டியில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டதாக மில்லா ஃபென்னி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு தாம், ஒரு விலைமாதுவை போன்ற உணர்வை தமக்கு ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
