ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! வெளியான காரணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அநுரகுமார, ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும் நிலையில், வடக்கில் முக்கிய பல அபிவிருத்தி திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாடுகளையும் செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அபிவிருத்தி திட்டங்கள்
இதன் ஆரம்பகட்டமாக யாழ்.குறிகாட்டுவான் இறங்குதுறைமுகத்தை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கையை ஜனாதிபதி யாழ்.விஜயத்தின் போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அத்துடன், காரைநகர் உட்பட யாழில் கரையோரப் பகுதிகளில் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி பல திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
மேலும் பல சந்திப்புகளையும் ஜனாதிபதி யாழ்.விஜயத்தின் போது நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார்.
you may like this
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam