புதிய சட்டமூலங்கள் குறித்து எதிர்க்கட்சி விடுக்கும் எச்சரிக்கை
நாட்டில் இரு புதிய சட்டமூலங்களைக் கொண்டுவந்து, அரசு சட்டபூர்வமான முறையில் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் திணிக்க முயல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச பயங்கரவாதம்
மேலும் அவர், "ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச் சுதந்திரம், சித்தாந்த சுதந்திரம், அரசியல் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்துடன் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமைகள் காணப்படுகின்றன.

ஆனால், அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டமூலங்கள் மக்களின் இந்தச் சுதந்திரத்தைப் பறிக்கின்றன.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இரு சட்டங்கள் மூலம் நீதிமன்ற அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பயங்கரவாதி யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் அணியும் ஆடை, சிகை அலங்காரம், பச்சைக்குத்துதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு எவரையும் பயங்கரவாதியாகவும், குற்றவாளியாகவும் முத்திரை குத்தும் அதிகாரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இது 220 இலட்சம் மக்கள் மீது சட்டபூர்வமாக அரச பயங்கரவாதத்தைத் திணிப்பதாகும்." என்றார்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri