ட்ரம்ப்பின் நோக்கம் குறித்து ஈரான் சந்தேகம்
டொனால்ட் ட்ரம்ப்பின் நோக்கம் குறித்துத் தீவிர சந்தேகத்துடன் இருப்பதாக ஈரானின் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டாரிலும் பிற மத்தியஸ்தர்கள் மூலமாகவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஈரான் தொடர்ந்து நடத்தி வருகின்ற நிலையில் இந்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரான், கட்டார் மத்தியஸ்தர்கள் மற்றும் பிற அமைப்புகள் மூலமாக அமெரிக்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
எனினும், ட்ரம்ப்பின் நோக்கம் குறித்துத் தங்களுக்கு ஒரு கணம் கூட சிறிதும் நம்பிக்கை இல்லை என ஈரானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸிடமிருந்து பெறப்பட்ட செய்தியைத் தெஹ்ரான் சாதகமாக மதிப்பிட்டுள்ளதாகவும், அதற்கான பதிலைக் பரிசீலித்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அமெரிக்க ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரை ஆதரிக்கும் போரை விரும்பும் தீவிரவாதிகளின் தூண்டுதல்களுக்குப் பலியாகிவிடுகிறார்கள் என்பதையே வரலாறு காட்டுகிறது என்று அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்பு மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராகத் தீர்க்கமான மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கக்கூடிய வகையில் முழுமையான பாதுகாப்புத் தயார்நிலையுடன் இருப்பதே ஈரானின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும் தஹ்ரான் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan