இலங்கை வந்த இரண்டு இந்தியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்! பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட உயிர்
மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்குண்டு இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு இந்தியர்களை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(31.10.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
நேற்றையதினம் மாலை, கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு இந்தியர்கள் நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது, கொட்டவில பொலிஸ் உயிர்காப்புப் பிரவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ், மற்றும் மயூர, திசாநாயக்க, தேஷான், கஹவத்த மற்றும் ஹசங்க ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இவர்களை மீட்டு ஆரம்ப சிகிச்சை அழித்துள்ளனர்.
இதன்போது, 28 மற்றும் 29 வயதுடைய இந்தியப் பிரஜைகளே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கொட்டவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri