புலனாய்வாளர்களை வைத்து அநுர செய்யும் சூழ்ச்சி.. குற்றம்சாட்டும் மகிந்த தரப்பு
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காவும், அரசியல் பழிவாங்கலுக்காக அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர், "அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது. கைதுகளும் அதற்கமைவாகவே இடம்பெறுகின்றன. பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியாக நாமல்
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காவும், அரசியல் பழிவாங்கலுக்காக அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த கால தலைவர்களின் ஆட்சியின்போது இவ்வாறான தன்மை இருக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரச நிறுவனங்களை முழுமையாக அரசியல் மயப்படுத்தியுள்ளார்.
இது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச நிச்சயம் வெற்றிப்பெறுவார்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்போம். அதற்கான நடவடிக்கைகளை இந்த மாதம் முதல் ஆரம்பிப்போம்” என தெரிவித்தார்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri