மன்னாரின் இரு சாதனைச் சகோதரர்களின் நெகிழ்ச்சிக் கதை
மன்னாரில் விசேட தேவையுடைய இரண்டு சகோதரர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.
அகில் மெத்யூ மற்றும் ஆத்விக் மெத்யூ. தசைச் சிதைவு நோயுடன் வாழும் இரு சகோதரர்கள்.
ஒவ்வொரு நாளும் இவர்களைப் பாடசாலைக்குத் தூக்கிச் செல்லும் பெற்றோர், புத்தகப் பையைச் சுமக்கும் நண்பர்கள், பொறுமையாக வழிகாட்டும் ஆசிரியர்கள்.இவர்களின் துணையுடன், எந்தத் தனியார் வகுப்புக்கும் செல்லாமல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தனர்.
சாதனை
ஆத்விக் மெத்யூ, தனது பாடசாலையான மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் முதலாவது இடத்தைப் பெற்றார். சதுரங்கப் போட்டியில் மாகாணம் முதல் தேசிய மட்டம் வரை விளையாடி, பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

இந்த இரு பிள்ளைகளின் தந்தை ஓர் அரச உத்தியோகத்தர். தனது தொழில் வாழ்க்கையையும் பொறுப்புகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, தனது பிள்ளைகளின் தேவைகளுக்காகவும் வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வருகிறார். அவர்களின் தாயும் தந்தையும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையே பிள்ளைகளுக்காக மாற்றியமைத்துள்ளனர்.
தசைச் சிதைவு மற்றும் இது போன்ற நோயால் பாதிக்கப்பட்ட பல பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை காணப்படுவதாக அந்தத் தந்தை கவலை தெரிவிக்கிறார்.
கோரிக்கை
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கும், பொது சேவைகளைப் பெறுவதற்கும், சமூகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கும் தேவையான வசதிகள் இலங்கையில், குறிப்பாக மாவட்ட மட்டங்களில், போதுமானதாக இல்லை என அந்தத் தந்தை சுட்டிக்காட்டுகிறார்.

சக்கர நாற்காலிகள் மற்றும் அணுகல்தன்மை கொண்ட பாடசாலைகள் நாடு முழுவதிலும் அமையப்பெற வேண்டும் , போக்குவரத்து வசதிகள், பொது நிறுவனங்கள், வணிக வளாகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு ஆதரவான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
தங்கள் பிள்ளைகளைப் போன்ற ஏனைய பிள்ளைகள் வீட்டுக்குள் முடங்காமல், மற்றவர்களைப் போலவே பாடசாலைக்குச் சென்று, கல்வி கற்று, சமூகத்தில் வாழ்ந்து, தங்களது கனவுகளை நனவாக்கக்கூடிய சூழல் உருவாக வேண்டும் என்பதே இந்தக் குடும்பத்தின் எதிர்பார்ப்பாகும்.



தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan