இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த அனுர எம். பி
இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் நேற்று (23.01.2024) நடைபெற்ற சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அத்துடன், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இருவரும் சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு சந்திப்புக்கள்
கடந்த டிசம்பரில் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக சந்தோஷ் ஜா பதவியேற்றுக் கொண்ட பின்னர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுடனான முதலாவது சந்திப்பு இன்று நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |