அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எழுத்தறிவு அற்றவர்கள்...! சுமந்திரன் காட்டம்
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், வாசிக்கத் தெரியாத மற்றும் எழுத்தறிவு அற்றவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (23.01.2024) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
”இலங்கையின் தொடர்பாடல் துறையை மையப்படுத்திய பாரிய மாற்றமொன்றை மேற்கொள்ளவுள்ள சட்டம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படுகிறது.
எனினும், இந்த சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான பொது இணக்கப்பாடு இந்த நாடாளுமன்றத்தில் இல்லை.
குறித்த சட்டமூலம் தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென வாக்களித்தவர்களில் அதிகளவானோர் வாசிக்க தெரியாதவர்கள்” என சாடியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri