அனுரகுமாரவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லை: ஞா.சிறிநேசன்
தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(28.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மையான விடயத்தினை சொல்லியிருக்கின்றார் என்றால் அது ராஜபக்ச குடும்பத்திற்கு பின்னடைவினை ஏற்படுத்தும் நிலை காணப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து தமிழ் மக்கள் சிறந்த முறையில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும்.
இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக காணப்படுகின்றது. நவம்பர் மாதத்துடன் ஜனாதிபதியின்
பதவிக்காலம் முடிவடைவதன் காரணமாக அரசியல்யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதி
தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
அதேநேரம் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைகின்றது. இந்த வகையில் ஜனாதிபதி தேர்தலை எந்தவகையிலும் நிறுத்தமுடியாது.
நாடாளுமன்ற தேர்தல்
அது அரசியல்யாப்புக்கு விரோதமாகயிருக்கும். அதேநேரம் 21ஆவது அரசியல் யாப்பின் திருத்ததிற்கு அமைவாக இரண்டரை வருடத்தினை பூர்த்தி செய்த பின்னே நாடாளுமன்றத்தினை கலைத்து தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது.

அவ்வாறு பார்க்கும்போதும் இரண்டரை வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கும் முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினை பொறுத்த வரையில் தமக்கு சாதகமான நிலையினையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்.
அவர் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்தநிலையில் பசில் ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே வைக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam