கனடாவில் கல்வி கற்க இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு முக்கிய தகவல்
கனடாவில் கல்வி கற்க உத்தேசிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் மாணவர்களின் நலன்களை உறுதி செய்யும் வகையிலான திட்டமொன்றை கனடாவின் ஒன்றாரியோ அறிமுகம் செய்ய உள்ளது.
கனடிய தொழிற்சந்தையில் போட்டித் தன்மை நிலவும் துறைசார் கற்கை நெறிகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட உள்ளனர்.
குறிப்பாக கற்கை நெறிகளில் தொழிற்சந்தை கேள்வியின் அடிப்படையிலான வீசா வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விருந்தோம்பல், சிறுவர் பராமரிப்பு, கணிதம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை
இருப்பினும் கடந்த 2023ம் ஆண்டில் உள்ளீர்க்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையை விடவும் கூடுதல் தொகை மாணவர்களை உள்ளீர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை வரையறுக்க திட்டமிட்டுள்ள நிலையில், காத்திரமான முறையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான மாணவர் வீசா வழங்குவதில் ஒன்றாரியோ மாகாணம் கவனம் செலுத்தி வருகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்தில் சிறந்த முறையில் சர்வதேச மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதனை உறுதி செய்யும் வகையில் மேலும் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
