மோடியை சந்திக்கும் ஜனாதிபதி அநுர.. யாழ். காங்கேசன்துறை குறித்து சிறீதரன் எம்பி கோரிக்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தற்போதைய இந்திய விஜயத்தின் போது, காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தின் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்கு முதன்மை முக்கியத்துவம் வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்திய அரசாங்கம் ஏற்கனவே 61 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக வழங்க உறுதிப்படுத்தியுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்நிலையில், அதற்கான நிலுவையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேலும் தாமதமின்றி இறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், இந்த ஒப்பந்தம் நீண்டகால அடிப்படையிலான திட்டமாக அமைக்கப்பட்டு, நிலையான வளர்ச்சி, வர்த்தக விரிவாக்கம் மற்றும் பிராந்திய இணைப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
காங்கேசன்துறை துறைமுகத்தை வலுப்படுத்துவது வடக்கு மாகாணத்தின் பொருளாதார மீட்சியை வேகப்படுத்தி, புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதோடு, இலங்கை - இந்தியா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்தும்.
மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது 1400 மீற்றராக உள்ள ஓடுபாதையை 3000 மீற்றராக விஸ்தரித்து, போயிங் மற்றும் எயார்பஸ் போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
தமிழர் தாயகத்தில் நீடித்த பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்புக்களையும் உறுதிப்படுத்துவதற்கு, இத்திட்டங்களில் உடனடி நடவடிக்கை அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri