அநுர அரசில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு ஒருபோதும் கிடைக்காது..! காசிலிங்கம் விக்னேஸ்வரன்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Theepan May 22, 2026 06:51 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தவிர வேற எந்த ஒரு சிங்கள தலைமையும் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை கொடுப்பதற்கு மனதளவில் கூட விருப்பம் கிடையாது என முன்னாள் வடகிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சரின் செயலாளர் காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(21.05.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர் கனமழை - பாடசாலை பேருந்து விபத்தில் மாணவன் படுகாயம்...!

தொடர் கனமழை - பாடசாலை பேருந்து விபத்தில் மாணவன் படுகாயம்...!

தமிழ் மக்களுக்கான விடியல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜேவிபியும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை வழங்குவது என்பது பகல் கனவு. தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை பகுதியாக வேணும் வழங்குவதற்கு மனதளவில் விருப்பம் கொண்ட ஒரு ஜனாதிபதி என்றால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மட்டுமே விருப்பம் கொண்டிருந்தார்.


அந்த கால பகுதியில் நான் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்ற நிலையில், இந்த விடயம் தொடர்பில் பல்தரப்பட்ட தீர்மானங்களை என்னுடன் அவர் பேசியிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க சந்திரிகா கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் கொளுத்தி குழப்பி இருந்தார்.

அநுர அரசில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு ஒருபோதும் கிடைக்காது..! காசிலிங்கம் விக்னேஸ்வரன் | Anura Government Kasilingam Wigneswaran

இலங்கை தீவில் தமிழ் மக்களை தேசிய இனமாக அங்கீகரிக்காத சிங்கள ஆட்சியாளர்கள் இன்னும் இரண்டாம் தர பிரஜைகளாக மட்டுமே பார்க்கப்படுகின்ற நிலையில், அதிகார பகிர்வை வழங்க மறுக்கின்ற நிலையில் அவ்வப்போது அதிகாரப் பரவலாக்கம் என்ற கருத்துக்களை கூறி ஏமாற்றுகிறார்கள்.

தமிழ் தலைமைகள் அதிகார பகிர்வு என்றால் என்ன அதிகார பரவலாக்கம் என்றால் என்ன என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த முடியாதவர்களாக காணப்படுவது எமது இனத்துக்கு கிடைத்த ஒரு சாபம்.

இலங்கையில் போர்த்துக்கீசர் ஆட்சியில் யாழ்ப்பாணம் , கண்டி கோட்டை என்கின்ற மூன்று இராசதானிகளாக பிரித்து ஆட்சி செய்தார்கள்.

அதிகார பகிர்வு

பண்டாரநாயக்கா மூன்று இராசதானிகளையும் மூன்று சமஷ்டி அலகாக பிரித்து ஆட்சி அதிகாரங்களை வழங்க விரும்பிய போதும் மிதவாத சிங்கள தலைவர்கள் அதனை குழப்பினார்கள்.

தேசிய மக்கள் சக்தி மாகாண அதிகாரங்களை இல்லாம் ஒழிப்பதற்காக பல்வேறு வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பிரதேச சபைகளின் அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கு பிரஜா சக்திக் குழுக்களை உருவாக்கி இருக்கிறது. 13ஆம் திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் சட்ட நடைமுறைகளுக்கு முரணாக பிரஜா சக்தி குழுக்களை உருவாக்கி இருக்கிறது.

அநுர அரசில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு ஒருபோதும் கிடைக்காது..! காசிலிங்கம் விக்னேஸ்வரன் | Anura Government Kasilingam Wigneswaran

தமிழ அரசியல்வாதிகள் இந்த விடயங்களை நன்கு அறிந்தும் ஒற்றுமையுடன் எதிர்க்க தவறி விட்டார்கள். தமது சொந்த அரசியலுக்காக வழக்குகளை போடும் தமிழ் அரசியல்வாதிகள் எமது இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளை சட்ட நீதியாக எதிர்கொள்வதில் ஒற்றுமை அற்றவர்களாக இருப்பது தான் உண்மை.

அதேபோன்று வடக்கு மாகாணத்தில் ஆளுநர் மாகாண அதிகாரங்களை மத்திக்கு தாரை வார்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவது வெளிப்படையாக தெரிகிறது. மாகாண சபை ஒன்று இல்லாத நிலையில் மாகாணத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு ஆளுநரிடம் இருக்கின்றது.

மாகாண சபை தேர்தல்

இந்த நிலையில் மத்திய அமைச்சின் பிடிக்குள் மாகாண அமைச்சுகளை வைத்திருப்பதற்காக அரசியல் கட்சிப் பிரதிகளை மாகாண அமைச்சுக்களை கண்காணிப்பதற்கு நியமித்திருக்கிறார்.

அநுர அரசில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு ஒருபோதும் கிடைக்காது..! காசிலிங்கம் விக்னேஸ்வரன் | Anura Government Kasilingam Wigneswaran

இந்த செயற்பாடு மற்றும் முழுதாக மாகாண அதிகாரங்களை பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடாக பார்க்கப்படுகின்ற நிலையில், மாகாண சபை முறையை இல்லாமல் ஒழிப்பது இவர்களின் நோக்கம்.

ஆகவே 13ஆம் திருத்தம் மாகாண சபை முறையை நடைமுறை படுத்துவதன் மூலமே தமிழ் மக்களின் குறைந்தபட்ச அதிகாரங்களையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை எந்த காலத்திலும் வழங்க மாட்டாது என்றார்.  

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US