தொடர் கனமழை - பாடசாலை பேருந்து விபத்தில் மாணவன் படுகாயம்...!
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பேருந்தும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(22.05.2026) காலை இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் - பொககவந்தலாவ பிரதான சாலையில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டம் பகுதியிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மாணவன் படுகாயம்
பொகவந்தலாவவிலிருந்து ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர் திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நடந்த நேரத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 20 ஆசிரியர்கள் பேருந்தில் பயணித்துள்ளன எனவும் அதில் ஒரு மாணவன் மாத்திரம் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என நோர்வூட் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
