ஓட்டமாவடியில் அன்டிஜன் பரிசோதனையில் எட்டு பேருக்கு கோவிட் தொற்று
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் எட்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதன்போது கோவிட் தொற்றாளர்களுடன் முதல் தொடர்புடைய உறவினர்கள் என 27 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 08 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், எட்டு பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர்,
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்
ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri