கோறளைப்பற்று மத்தியில் அன்டிஜன் பரிசோதனை - 8 பேர் தொற்றாளர்களாக அடையாளம்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபத்தாறு (66) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எட்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளன.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், பயணக்கட்டுப்பாட்டை மீறிப் பயணித்தவர்கள், சட்டவிதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என அறுபத்தாறு (66) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் இருபத்தேழு (27) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளன.
குறித்த அன்டிஜன் பரிசோதனை நிகழ்வில்; மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ்
தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர்.
பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.





பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri