பயங்கரவாத தடைச் சட்ட கைது விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்பாக நேற்று (26)ஒருவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவீரர் தின நிகழ்வுகள்
இதன்போது சுகவீனம் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் அவரது மகன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடுசெய்த குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam