அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்
மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வறுமை காரணமாக அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக நடந்தே மெக்சிகோ நாட்டிற்கு சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அமெரிக்கா செல்வதாகவும், தினமும் 30 கிலோமீட்டர் தொலைவு நடந்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
680,000 புலம்பெயர்ந்தோர்
அமெரிக்காவுக்கு புலம்பெயர தினமும் சுமார் 8000 பேர் மெக்சிகோ வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்க எல்லையை அடைவதற்கு முன் அவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மெக்சிகோ தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதேவேளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 680,000 புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு புலம்பெயர சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |