இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஈழத்து உறவுகளை சந்தித்த கில்மிஷா (Photos)
தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி கில்மிஷா ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்று உறவுகளை சந்தித்துள்ளார்.
சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கில்மிஷா சென்று அங்கு வாழும் உறவுகளை சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருக்கும் ஈழத்து உறவுகள் வரவேற்பளித்துள்ளனர்.

ஜனாதிபதி பாராட்டு
மேலும் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வெற்றியுடன் சென்று எமது உறவுகளை சந்தித்து வெற்றியை பகிர்ந்துகொள்ள முடிந்ததாகவும் கில்மிஷா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri