மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு பேரணி
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த விழிப்புணர்வுப் பேரணியானது, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஆலோசனையில் இடம்பெற்றுள்ளது.
மகிழூர்முனை சக்தி வித்தியாலய முன்றலில் ஆரம்பமான பேரணியில் புகைத்தல் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதக விளைவுகளை குறிக்கும் பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பிய வண்ணம் மகிழூர் பொது மைதானத்தை அடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
விழிப்புணர்வு வீதி நாடகம்
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் நெறியாள்கையில் 'ஆடல் நிலம்' வழங்கிய “விரல் இடுக்கில் கசியும் உயிர்" எனும் புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு: விசாரணைகளில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |