S-400 ஏவுகணை அமைப்புக்களை ரஷ்யாவிடம் கோரும் இந்தியா
ரஷ்யாவின் தயாரிப்பான S-400 ஏவுகணை அமைப்புகளின் விநியோகத்தை விரைவுபடுத்த இந்தியா அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு
இந்திய பாதுகாப்பு செயலாளரின் மொஸ்கோ பயணத்தின்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இராணுவம் மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா - ரஷ்யா இடையேயான ஆணையத்தின் (IRIGC-M&MTC) 21வது கூட்டத்தொடரையொட்டி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்தார்.
உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மைக்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
