நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இன்று (04.07.2024) நுவரெலியாவிலும் (Nuwara Eliya) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மஹிந்த மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கு அமைவாகவும் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹெட்டியாராச்சி தலைமையிலும் இடம்பெற்றுள்ளது.
இரகசிய தகவல்
இதன்போது, நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
மஹிந்த மாவத்தை பகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகமாக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இவ்வாறு திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 23 நிமிடங்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
