மற்றுமொரு 6 இலட்சம் அமெரிக்க டொலர் மாயம் : நளிந்த வெளியிட்ட தகவல்
தபால் திணைக்களத்தால் செலுத்தப்பட்ட வெளிநாட்டுப் பணம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கிடைக்காத சம்பவம் குறித்து, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது, திறைசேரியில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்து விளக்கமளித்த அமைச்சர், அஞ்சல் துறையில் நடந்த இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்ட பொலிஸார் - சாணத்தால் தாக்கி விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள்
அஞ்சல் துறைக்குச் செலுத்தப்பட்ட
அமெரிக்க அஞ்சல் துறைக்குச் செலுத்தப்பட்ட 625,000 டொலர் அஞ்சல் துறைக்குக் கிடைக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த பரிவர்த்தனைகள் இரண்டு வெவ்வேறு சமயங்களில் மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பில் அஞ்சல் திணைக்களம் மற்றும் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தால் ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம் - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam