தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம் - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28.04.2026) சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்க பவுணொன்று நேற்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 2000 ரூபாய் குறைவடைந்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (28.04.2026) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலர்களாக பதிவாகியிருந்தது.
வெள்ளி விலை
அதேநேரம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது.
