இலங்கையில் மேலும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாக கூறப்படும் செய்திகளை¸ இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் நிராகரித்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த ஊகங்களுக்கு மாறாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பொன்சேகாவிற்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தல்
இதன்படி, அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை பொன்சேகா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இதுவரைக்கும் சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா ஆகியோரும் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சம்பிக்க ரணவக்கவும் முன்னதாக தம்மை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமாறு மகிந்த தரப்பிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், அதனை மகிந்த தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ரணிலுக்கு ஆதரவளிக்கவில்லையென்றால், தொழில் அதிபர் தம்மிக்க பெரேராவையே ஜனாதிபதி வேட்பாளராக அவர்கள் தெரிவு செய்ய விருப்பம் வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |