அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி சட்டமா அதிபரின் சேவையை நீடித்த ரணில்
இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அனுமதியை வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.
சட்டமா அதிபரின் பதவிக் காலம் இன்றுடன் (26) நிறைவடையவுள்ளது.
அதேசமயம் ஏற்கனவே அவருக்காக ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசை நிராகரித்த அரசமைப்பு சபை இன்று விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

காட்டமான கடிதம்
இந்தப் பின்னணியிலேயே அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி ஜனாதிபதி ரணில், சட்டமா அதிபரின் சேவைக் காலத்தை நீடித்திருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது.
முன்னதாக அரசமைப்பு சபைக்கு 8 பக்கங்களைக் கொண்ட காட்டமான கடிதமொன்றை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிய ஜனாதிபதி ரணில், அரசமைப்புச் சபையின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri